தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - வெள்ளி மூஷிக வாகனம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் உலக பிரசித்திப் பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, விநாயகர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை
tiruvannamalai deepath festival

By

Published : Dec 1, 2019, 1:06 PM IST

அண்ணாமலையார் திருக்கோயிலில் டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை ஆறு மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

சண்டிகேஸ்வரர்

தீபத் திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் நாளான இன்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள இரண்டாம் பிரகாரத்தில் பெரியபட்டம் சுவாமிநாத சிவாச்சாரியார் அண்ணாமலையார் கோவில் மிராசு ரகுராமனால் வாஸ்து பூஜை செய்து விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

விநாயகர்

அதைத்தொடர்ந்து மூலவரான சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி, நான்கு மாட வீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதையும் படிக்க: திருமலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நீட்டிப்பு?

ABOUT THE AUTHOR

...view details