திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி 10-டிரேக்டரில் கிருமி நாசனி அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 805 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினர் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள்.
வந்தவாசியில் இருந்து டெல்லி சென்று திரும்பிய தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த 16 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் தெருக்கள் உள்பட வந்தவாசி முழுவதும் பிளிச்சிங் பவுடர், கிறுமிநாசினி அடிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி சென்னையில், மாலில் வேலை செய்து சொந்த ஊரான வேளானந்தலுக்கு திரும்பிய ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க... அரியலூரில் கரோனா தடுப்புப் பணி தீவிரம்