தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது தடைகளை மீறி சிலைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

Collector
Collector

By

Published : Sep 5, 2021, 8:53 AM IST

தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா . முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைகளை மீறி சிலைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .

அனைத்து மாவட்ட பொதுமக்களும் அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை கட்டுபாட்டுபாடுடன் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி பண்டிகையினை கொண்டாட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி , மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details