திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு கடந்த 1ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகின்ற 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த நிகழ்வினைக் காண 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.
பேட்டரி காரில் ஆய்வு செய்தனர் தீபத்திருவிழாவினைக் காண வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான பக்தர்கள் இளைப்பாறும் இடங்கள், தங்கும் அறைகள், கிரிவலப்பாதை, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி, வருவாய் அலுவலர், கோட்டாச்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியீடு!