திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி, செம்மம்பட்டி, உள்செக்கடி ஆகிய ஐந்து கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் கல்வராயன் மலையில் 4.6 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.13.6 கோடி மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு - thiruvannamalai latest news
திருவண்ணாமலை: ரூ.13.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் கல்வராயன் மலைப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நடந்துசென்று ஆய்வு நடத்தினார்.
மக்களிடம் மனுக்களை வாங்கி மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில் நேற்று (ஜூன்18) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி 2.6 கிலோமீட்டர் தூரம் கரடு, முரடான மலைப்பகுதியில் பொடி நடையாக நடந்துசென்று சாலை அமைக்கும் பணிகளை ஆய்வுசெய்தார். அப்போது புதிய சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...'இனி தண்ணீர் லாரி வந்தவுடன் ஓட வேண்டியதில்லை' - குடிநீர் வாரியத்தின் முயற்சிக்கு சென்னைவாசிகள் வரவேற்பு!
Last Updated : Jun 19, 2020, 10:31 AM IST