தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கிவைத்த ஆட்சியர் - உலர் உணவு பொருள்கள்

திருவண்ணாமலை: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

உலர் உணவுப் பொருட்கள்
உலர் உணவுப் பொருட்கள்

By

Published : Jul 18, 2020, 5:45 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றியம் மாதிரி தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாள்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 37 மாணவர்களுக்கும் 24 மாணவியர்களுக்கும் உலர் உணவுப் பொருள்களை ஆட்சியர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 2,007 சத்துணவு மையங்களில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் (1ஆம் வகுப்பு-5ஆம் வகுப்பு) 1 லட்சத்து 65 ஆயிரத்து 48 மாணவ, மாணவியர்களுக்கு தலா 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு அடங்கிய பை வழங்கப்படுகின்றன.

மேலும் உயர் தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர் ஒருவருக்கு 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு அடங்கிய பை வழங்கப்படுகின்றன. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 2,007 சத்துணவு மையங்கள் மூலம், 1,686 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 48 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.


இதையும் படிங்க: உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details