திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மாநில வர்த்தகப் பிரிவில் தொழிலதிபர் தணிகைவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள நவிரம் பூங்கா சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்துள்ளார்.
இதனைக் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்கனவே சுவற்றை வெள்ளை அடித்து வைத்திருப்பதாகக் கூறி பாஜக தொண்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே திருமாவளவனின் சகோதரி கரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததால், இந்த ஆண்டு பிறந்தநாளை திருமாவளவன் கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இருப்பினும் விசிக தொண்டர்கள் பாஜகவின் தலைவர்கள் பெயரை அந்த சுவற்றில் எழுதவே கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் இருகட்சித் தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுவற்றில் எழுதப்பட்ட பாஜக தலைவர்களின் பெயர்களை காவல் துறையினர் அழிக்க அறிவுறுத்தினர். மேலும், இந்த சுவற்றில் தலைவர்களின் பெயர்கள் எழுதக்கூடாது என்று சமரசம் பேசி இருதரப்பினரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
சுவர் விளம்பரம் தொடர்பாக பாஜக, விசிக இடையே வாக்குவாதம்! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை: அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள நவிரம் பூங்கா சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்வது தொடர்பாக பாஜக, விசிக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சுவரில் விளம்பரம் செய்வது தொடர்பாக பிரச்னை
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் காங்கிரஸ்-அதிமுக மோதல்