திருவண்ணாமலை:நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரையில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது
வனத்துறையினர் அனுமதியின்றி நகர பாஜகவின் சார்பில் இன்று (ஆக. 13) சுமார் 75 அடி நீளம் உள்ள தேசியக்கொடியினை ஏற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலை மீது அனுமதியின்றி தேசியக்கொடியை பறக்கவிட்ட பாஜகவினர் - திருவண்ணாமலை
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது சுமார் 75 அடி நீளம் உள்ள தேசியக்கொடியை வனத்துறையினர் அனுமதியின்றி பாஜகவினர் ஏற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அனுமதியின்றி திருவண்ணாமலை மலை மீது தேசியக்கொடியை பறக்கவிட்ட பாஜக
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பாஜகவை சேர்ந்த 10 பேரை மலையில் இருந்து கீழே அழைத்துவந்தனர். அதோடு அனுமதியின்றி பொதுயிடங்களில் கொடியேற்றக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம்