தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலை கிரிவலப்பாதையை பசுமையாக்க ஆட்சியரின் 'பலே' முயற்சி! - Collector Kandhasamy

திருவண்ணாமலை: கிரிவலப் பாதை மலைப்பகுதிகளில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் விதைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.

Tiruvannamalai

By

Published : Jul 28, 2019, 10:08 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 'ஜல்சக்தி அபியான்' நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீரினைப் பாதுகாத்தல், நீர் சேமித்தல் குறித்து பல்வேறு திட்டங்கள், விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்ட விதைப் பந்துகளை விதைக்கும் பணி மழைக் காலங்கள் தொடங்கியதை அடுத்து மாவட்டம் முழுவதும் மரங்கள் குறைவாக இருக்கும் வனப்பகுதிகளில் காடுகளை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதை மலைப்பகுதிகளில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை விதைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.

ஜல்சக்தி அபியான்
முதற்கட்டமாக திருவண்ணாமலை வனப்பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு விதைகளுடன் கூடிய விதைப் பந்துகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் ஆகியோர் தலைமையில் நீர் துளிகள் இயக்கம், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பாக விதைப் பந்துகள் எறியும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும், காஞ்சி சாலை அபாய மண்டபம் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த விதைப்பந்துகள் விதைக்கப்பட்டன.
விதைப் பந்துகள் விதைக்கும் பணி
இந்த நிகழ்ச்சியில், ஜீவா வேலு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நகராட்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கலந்துகொண்டு விதைப் பந்துகளை வீசினர்.

ABOUT THE AUTHOR

...view details