திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. மஹா கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
ஏழாம் நாளான நேற்று பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில் தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவேந்திரனின் மகளான தேவசேனாவுடன் திருமணம் நடைபெறும் சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருமணத்தை கண்டு களித்து முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று விண்ணைப் பிளக்க பக்தி பரவசத்துடன் கூறி அருள் பெற்றனர்.