மதுரை போக்குவரத்து காவல் துறை வரம்பு மீறி அபராதத் தொகையையும், அநாகரிகமாக பேசியதால் அரிச்சந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தில் அவர் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். அவர் அளித்திருந்த மரண வாக்குமூலம் தற்போது நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவாக திருவண்ணாமலை ரவுண்டானா அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு அரசையும் காவல் துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், அரிச்சந்திரன் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.