தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஹரியானாவைச் சார்ந்தவர்கள் தான் - ஐஜி கண்ணன் - திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூன்று மாநிலங்களில் 10 நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனவும்; கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு பெங்களூரு வழியாக விமானத்தில் தப்பிச் சென்றுள்ளனர் என்றும்; கொள்ளையர்கள் ஹரியானாவைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதாக வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன்
வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன்

By

Published : Feb 16, 2023, 4:23 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது, ''இந்தச் சம்பவம் குறித்து கோலார், குஜராத், ஹரியானா ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த 10 பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் கோலாரில் இருந்து பெங்களூரு வழியாக விமானத்தில் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும். இன்னும் சில தினங்களில் இந்த கொள்ளை வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும். குறிப்பாக இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கோலார் பகுதியில் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், குஜராத் பகுதியில் வேலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா, ஹரியானா மாநிலத்தில் திருவண்ணாமலை காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஹரியானா பகுதியில் உள்ள மேவாக் பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக இருப்பதால் காவல் துறையினருக்கு சவால்விடும் அளவிற்கு கடுமையான பகுதியாக உள்ளது. குற்றவாளிகளுடன் ஹரியானா காவல் துறையினரும் தொடர்பில் இருப்பதால், அந்தப் பகுதி தனிப்படை காவல்துறையினருக்கு சவால் விடும் அளவில் உள்ளது.

கொள்ளையர்கள் கோலார் பகுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலை பகுதியை நோட்டமிட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிகிறது'' என்றார்.

இதையும் படிங்க:உள்ளாடையுடன் திருட வந்த வடமாநில நபர் அடித்துக்கொலை - 6 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details