தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமயார் கோவில் ஆனி மாதம் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி - Tiruvannamalai Annamalayar Temple

திருவண்ணாமலை அண்ணாமலயார் கோவில் ஆனி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடியை தாண்டியது.

அண்ணாமயார் கோவில் ஆனி மாதம் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி
அண்ணாமயார் கோவில் ஆனி மாதம் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி

By

Published : Jul 29, 2022, 7:12 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை (28 ஜூலை) நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம், அதன்படி அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

அண்ணாமயார் கோவில் ஆனி மாதம் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு கோடியே 54 லட்சத்து 13 ஆயிரத்து 648 ரூபாய் மற்றும் 372 கிராம் தங்கமும், 708 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:'நீங்கள் தான் தினமும் டிவியில் வருவீர்கள்': பிரதமரை அடையாளம் கண்டு சிரித்த சிறுமி

ABOUT THE AUTHOR

...view details