தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோவிலில் ஆறாம் நாள் நவராத்திரி விழா - சிவாச்சாரியார்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆறாவது நாள் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 2, 2022, 7:46 AM IST

திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஆறாவது நாளான நேற்று (அக்.1) மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரத்தில் செய்யப்பட்டது.

அண்ணாமலையார் கோவில் ஆறாம் நாள் நவராத்திரி விழா

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த நவராத்திரி ஆறாவது நாள் உற்சவ தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: அக்.2 இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details