தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சிறப்புப் பிரதோஷ விழா - திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் பெரிய நந்தி பகவானுக்கு நேற்று நடைபெற்ற தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

By

Published : Apr 3, 2019, 9:18 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் பெரிய நந்தி பகவானுக்கு நேற்று தேய்பிறை பிரதோஷம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இறைவனுக்கு உகந்த சிறப்புப் பொருட்களைக் கொண்டு சிவாச்சாரியார்களால்அபிஷேகங்கள்மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

அபிஷேக ஆராதனையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் அமர்ந்து அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலையம்மைக்கு அரோகரா என்றுபக்தி முழக்கமிட்டனர். அதே சமயம் சிவனடியார்கள் பக்தி பாடல்களைப் பாடி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர். வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இறைவனின் பிரசாதத்தைப் வாங்கிக் கொண்டு இறைவன் அருளைப் பெற்றுச் சென்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details