திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பத்து நாள்கள் நடைபெறும் இந்த ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலையில் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும்.
சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் காலை 6 மணிக்கு தஷ்ணாயன புண்ணியகால கொடியேற்றம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.