தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது! - Thiruvannamalai District News

வீட்டில் 50 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

3 arrested for storing Gutka at home
3 arrested for storing Gutka at home

By

Published : Apr 22, 2021, 10:50 PM IST

Updated : Apr 23, 2021, 2:46 AM IST

திருவண்ணாமலை: நொச்சிமலை பகுதியில் உள்ள வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருப்பதாக திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினருக்கு நேற்று (ஏப்ரல் 21) ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், காவல் ஆய்வாளருக்கு அரிகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் நொச்சிமலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வல்லரசு நகரில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் 50 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர், விஜயேந்திரகுமார், லாதுராம், ராகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Last Updated : Apr 23, 2021, 2:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details