தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல்: மூவர் கைது! - ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாயத்து தலைவரை தாக்கிய 3 பேர் கைது  ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல் மூவர் கைது  Three arrested for assaulting panchayat leader  Three arrested for assaulting panchayat leader in thiruvannamalai  ssaulting panchayat leader  ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல்  செய்யாறில் ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல்
Three arrested for assaulting panchayat leader

By

Published : Feb 9, 2021, 10:21 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த நமண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவரது மனைவி குணபூசனம் (37), ஊராட்சி மன்றத் தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அமுல்ராஜ் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப். 07) மாலை குணபூசனம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அமுல்ராஜ், அவரது சகோதரர் பாண்டியராஜ் (31), உறவினர்கள் செல்வ விநாயகம் (32) உள்பட பலர் குணபூசனத்திடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் தரப்பினர் குணபூசனத்தை சரமாரி தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற குணபூசனத்தின் கணவர், உறவினர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இது குறித்து குணபூசனம் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அமுல்ராஜ், பாண்டியராஜ், செல்வவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருள் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் பள்ளி நிர்வாகி கொலை முயற்சி: கூலிப்படை அட்டகாசம்

ABOUT THE AUTHOR

...view details