தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் 6,395 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! - ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை: தமிழ்நாடு அரசின் சார்பில் ஆரணி, கலசபாக்கம் மற்றும் ஜமுனாமுத்தூர் வட்டங்களில் 6 ஆயிரத்து 395 பயனாளிகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

greevence meeting

By

Published : Nov 21, 2019, 11:20 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 6 ஆயிரத்து 395 பயனாளிகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, உள்ளிட்ட பலர் கொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

இந்நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு, மனுதாரர்களில் தகுதியானவர்களுக்கு நிவர்த்தி காணப்பட்டு, பல்வேறு துறைகளின் மூலமாக வட்ட அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அதிமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details