பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்றது அண்ணாமலையார் கோவில். ஆண்டு தோரறும் பல்வேறு திருவிழாக்கள் அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் நிலையில் மிகவும் புகழ்பெற்றது கார்த்திகை தீபத்திருவிழா.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24ஆம் தேதி காவல்தெய்வமான துர்கையம்மன் உற்ச்சவத்துடன் தொடங்கி 27ஆம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக உள்ள 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
டிசம்பர் 6ஆம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக அதிகாலையில் பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி திருக்கோவில் வளாகத்தின் உள்ளே நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதியுலா நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மேற்க்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவர்கள் பங்கேற்றனர்.
திருக்கார்த்திகை தீபதிருவிழா...அமைச்சர் சேகர்பாபு, ஏவ.வேலு ஆலோசனை அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தீபத்திருவிழாவின் போது வரும் விவிஐபிக்களுக்கு அமர இடவசதி மேற்கொள்ள வேண்டும் என்றும், கட்டளைதாரர்கள்,முக்கிய நபர்கள் கோயிலுக்கு வருவதற்கு அனுமதி டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும், அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் 100 மருத்துவ குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தேர் பவனி அன்று ஒவ்வொரு தேருக்கும் ்இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும், கிரிவலம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாலும், அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பக்தர்களின் அடிப்படை வசதிகள்,வாகன நிறுத்தம்,கழிவறைகள்,குளியல் அறைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
மேலும் பக்தர்கள் வசதிக்காக 2692 சிறப்பு பேருந்துகள் 6,431 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் குற்றவாளிகளை கண்டறியும் வகையில் கோமிராக்கள் பொருத்தப்பட்டு பேஸ் டிராக்கர் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கிரிவலப்பாதை, திருக்கோயிலில் வளாகம், முக்கிய வீதிகள்,தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 500 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
12097 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்றும், நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும், 19 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - கவனிக்க வேண்டியவை என்ன?