தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை கோயில் உண்டியல் வருவாய் 2 கோடி! - பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பணம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேர்த்திக்கடனாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

thiruvannamalai temple
thiruvannamalai temple

By

Published : Dec 19, 2019, 4:05 PM IST

உலக பிரசித்தி பெற்ற அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கார்த்திகை தீபத்திற்கும், பௌர்ணமி தினத்தன்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வந்து தீப தரிசனம் கண்டு கிரிவலமும் சென்றனர்.

திருவண்ணாமலை கோயிலில் உண்டியல் எண்ணும் பணியாளர்கள்

இவ்வாறு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை இந்த முறை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வந்ததால் இரண்டு கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கார்த்திகை திருவிழா பௌர்ணமி உண்டியல் வருவாய், 2 கோடியே 25 லட்சத்து 62 ஆயிரத்து 155 ரூபாயும், தங்கம் 292 கிராம், வெள்ளி 2 ஆயிரத்து 684 கிராம் காணிக்கையாக இருந்தன என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் நிரப்பக் கூடாது' - மனுதாரரின் வழக்கு தள்ளுபடி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details