தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகம் இல்லை... தமிழ்நாடு தான்" - இவங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும்! - சட்ட சபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு

'தமிழ்நாடா, தமிழகமா' என மாணவர்களுடன் ஆசிரியை உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

By

Published : Jan 9, 2023, 4:33 PM IST

தமிழ்நாடா...? தமிழகமா..? - மாணவர்களின் வீடியோ வைரல்

திருவண்ணாமலை: 'தமிழகமா, தமிழ்நாடா' என ஆசிரியரின் கேள்விகளுக்கு, மாணவர்கள் பதிலளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பொது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பெயரை தமிழகம் என்று அழைக்கலாம் என கருத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜவ்வாது மலை அடுத்த அரச வள்ளி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மகாலட்சுமி, தன் மாணவர்களுடன் ஆளுநரின் தமிழ்நாடு கருத்து குறித்து விவாதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆசிரியரின் கேள்விக்கு நொடிகளில் பதில் கூறிய மாணவர்கள், இறுதியில் தமிழகமா, தமிழ்நாடா என்ற கேள்விக்கு கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: "யப்பா!... வாங்க போலாமா" கூட்டம் கூட்டமாக வந்த யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details