தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்பது கொத்தடிமைகளை மீட்ட ஆரணி கோட்டாட்சியர்! - பத்து வருடமாக வேலை பார்த்து வரும் கொத்தடிமைகள்

திருவண்ணாமலை: பத்து வருடங்களாக செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 9 கொத்தடிமைகளை ஆரணி கோட்டாட்சியர் மைதிலி மீட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கொத்தடிமைகள்
மீட்கப்பட்ட கொத்தடிமைகள்

By

Published : Nov 28, 2019, 9:12 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில், படவேடு பகுதியைச் சேர்ந்த படவேட்டான் (எ) ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், 10ஆண்டுகளாக செஞ்சி தாலுகா கன்னலம் கிராமத்தைச் சேர்ந்த காசி (57) ஆனந்தன் (25) ஆகியோர் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட கொத்தடிமைகள்

இதேபோன்று பரிமளா (22) சிவா (37) ரமேஷ்(37) ரேவதி (30) ராஜேஸ்வரி(20) நகுலன்(2) மகாலட்சுமி (3) உள்ளிட்டோரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்து வந்துள்ளனர்.

இதில், காசி, ஆனந்தன் 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 28 ஆயிரம் ரூபாய்க்கு 10ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், காசியின் உறவினர்கள் திருவண்ணாமலை கொத்தடிமைகள் மீட்பு சங்கத்தில் இதுகுறித்து புகாரளித்தனர்.

அதனடிப்படையில், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி படவேட்டான் (எ) ஆறுமுகத்திற்கு சொந்தமான செங்கல் சூளையை ஆய்வு செய்தார். ஆய்வில் உண்மை கண்டறியபட்டதால் உடனடியாக 9 பேர் மீட்கப்பட்டு ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் நாற்று நடும் போராட்டம்
!

ABOUT THE AUTHOR

...view details