திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலுள்ள சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த குளத்தை, தூர்வாரி பராமரிக்க அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து 'மண்டகொளத்தூர் மக்கள் மன்றம்' என்ற அமைப்பை தொடங்கினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர், அனுமதி பெற்று சட்டப்படி தூர்வாரும் பணி தொடங்கிய போது, அக்குளத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி துறைக்கு கோரிக்கை வைத்த இளைஞர்கள். காவல் துறையினரின் உதவியுடன் இந்த பணி தொடங்கி முடிந்தனர்.