தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் பிடாரி அம்மனுக்கு உற்சவ விழா! - thiruvannamalai pidari amman urchavam function

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயில் சன்னதியில் உள்ள பிடாரி அம்மனுக்கு உற்சவ விழா நடைபெற்றது.

pidaari amman urchavam tiruvannamalai  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்  திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா  அண்ணாமலையார் கொடியேற்றம்  திருவண்ணாமலை கொடியேற்றம்  thiruvannamalai district news  thirukaarthikai function  thiruvannamalai pidari amman urchavam function  thiruvannamalai pidari amman
அண்ணாமலையார் கோவில் பிடாரி அம்மனுக்கு உற்சவ விழா

By

Published : Dec 1, 2019, 1:30 PM IST

திருவண்ணாமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்று. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். இவ்விழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று அண்ணாமலையார் கோயிலின் காவல் தெய்வமாக விளங்கும் பிடாரி அம்மனுக்கு உற்சவ விழா நடைபெற்றது.

அண்ணாமலையார் கோவில் பிடாரி அம்மனுக்கு உற்சவ விழா

கோயில் கொடிமரம் அருகில் உள்ள பிடாரியம்மன் சன்னதியில், பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்ட்டது. பின்னர் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில், பிடாரி அம்மன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் திரண்டு பிடாரி அம்மனை வழிபட்டனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!

ABOUT THE AUTHOR

...view details