கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.
ஆகவே, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று வழங்கினார். பின்னர் கூட்டம் அதிகமாகக் கூடியதால், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு நிவாரணப் பொருள்களை வாங்க முண்டியடித்துச் சென்றனர்.