தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிப்காட் அமைப்பதற்கு எதிராக 75ஆவது நாளாகப் போராடும் பாலியப்பட்டு கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு ஊராட்சியில் விளைநிலங்களை ஆக்கிரமித்து அரசின் சிப்காட் அமைய இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் 75ஆவது நாளாகப் போராடினர்

அரசின் சிப்காட்டுக்கு எதிராக 75 நாளாக போராடும் பாலியப்பட்டு மக்கள்
அரசின் சிப்காட்டுக்கு எதிராக 75 நாளாக போராடும் பாலியப்பட்டு மக்கள்

By

Published : Mar 6, 2022, 11:10 PM IST

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாலியப்பட்டு மக்கள்

அதன் ஒரு பகுதியாக, சிப்காட் நிலயெடுப்பிற்கு எதிராக இன்று(மார்ச் 6) 75ஆம் நாள் கிரிவலப்பாதையில் மலைசுற்றும் போராட்டம் நடைபெற்றது. அப்போது இயற்கையை வேண்டி, அக்கிராம மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். மேலும், தமிழ்நாடு அரசு போராடும் கிராம மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிப்காட் அமைவதற்கு எதிராக 75ஆவது நாளாகப் போராடிய பாலியப்பட்டு மக்கள்

இதையும் படிங்க:கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்; கோவையிலும் பாய்ந்த ஒழுங்கு நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details