தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுத் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்! - திருவண்ணாமலை எம் பி, எம் எல்ஏ ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை: நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

By

Published : Nov 23, 2019, 2:59 PM IST

திருவண்ணாமலை மாவட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கு பெறும் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

அதில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி முன்னிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்றபடி திட்ட செயல்பாடுகள் குறித்தும் உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி குழுவினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

அரசுத் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்!

இக்கூட்டத்தில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கு. பிச்சாண்டி கிரி, சேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட வருவாய் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்திய அமமுக!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details