தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை காலை பத்து மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு வேட்பாளர்களின் பட்டியல் நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆனைபோகி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், செங்கம் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி வார்டு எண் 19இல் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 26இல் போட்டியிடும் வேட்பாளர் ஆகிய 4 வேட்பாளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கலசபாக்கம் ஒன்றியம் எர்ணாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை போட்டியிடுகிறார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது மகன் கூறுகையில், "வேட்புமனு தாக்கல் செய்து பூட்டு சாவி சின்னம் பொறிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம்.