தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் திறக்கப்பட்ட பூ மார்க்கெட்! - ஜோதி பூ மார்க்கெட்

திருவண்ணாமலை: ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜோதி பூ மார்க்கெட் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூ மார்க்கெட்
பூ மார்க்கெட்

By

Published : Oct 6, 2020, 3:32 PM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை நகரில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம், நகராட்சியினர் அடைக்க உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால் மார்க்கெட்டில் வியாபாரம் செய்த வியாபாரிகள் திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள உள்ள 9 இடங்களில் புறவழி சாலைகளில் வியாபாரம் செய்துவந்தனர்

இதனையடுத்து பூ விவசாயிகள் சரியான விலை கிடைக்காமலும் வியாபாரிகளுக்கு சரியான வியாபாரம் நடைபெறாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டதையடுத்து இந்த மார்க்கெட்டை மீண்டும் திறக்க வியாபாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.

வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலித்த ஆட்சியர் கந்தசாமி இன்று (அக்டோபர் 6) முதல் ஜோதி பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வியாபாரம் செய்துகொள்ள அனுமதி அளித்தார். இதனையடுத்து வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details