தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை ஏடிஎம் திருட்டு: 3 நாட்களில் கொள்ளையர்களை நெருங்கிவிடுவோம்.. ஐஜி கண்ணன் தகவல்! - திருவண்ணாமலை கிரைம் செய்தி

ஏடிஎம் மையங்களின் தொழில்நுட்ப ரீதியாக விவரங்களை அறிந்தவர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும்; மூன்று நாட்களில் அவர்களை நெருங்கிவிடுவோம் எனவும் திருவண்ணாமலை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 13, 2023, 6:27 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி கண்ணன்

திருவண்ணாமலைவடக்கு மண்டல ஐஜி கண்ணன் இன்று (பிப்.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த அனைத்து ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களும் அதிகாலை 2-4 மணி முதல் நடைபெற்றுள்ளது. ஒரே கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதே போல சம்பவம் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகியப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தற்போது ஐந்து எஸ்பி-க்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான் இந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது.

மாவட்ட அளவில் ஐந்து டி.எஸ்.பிக்கள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏடிஎம் மையங்களின் தொழில்நுட்ப ரீதியாக விவரங்களை அறிந்தவர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களில் கொள்ளையர்களை நெருங்கி விடுவோம்” என்றார்.

இதையும் படிங்க:EXCLUSIVE: 'பெர்டோ' ஏடிஎம் தான் டார்கெட்.. ஓராண்டில் 10 இடங்களில் ஒரே பாணியில் கைவரிசை!

ABOUT THE AUTHOR

...view details