தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடைப்பட்ட குடிநீர் குழாய்- வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் - Renovation Thiruvannamalai Road

திருவண்ணாமலை: சாலை சீரமைப்புப் பணியின்போது உடைக்கப்பட்ட குடிநீர் குழாயிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதால் அதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்யும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்
வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்

By

Published : Mar 9, 2020, 9:09 PM IST

Updated : Mar 9, 2020, 11:39 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலைப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி இன்று காலை தொடங்கியது. இதையொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை அகலப்படுத்துவதற்காக பூமி பூஜை போடப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களிடம் இவ்வழியாக பிரதான குடிநீர் குழாய் செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அலட்சியம் செய்த அலுவலர்கள் பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டனர்.

பணியின்போது பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் ஆறாய் பெருகி ஓடியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நகராட்சி உயர் அலுவலர்களிடம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்

இதையும் படிங்க: குடிநீர் வழங்கவேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Last Updated : Mar 9, 2020, 11:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details