தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் நினைவு நாள்: தி.மலை திமுக எம்.எல்.ஏ மரியாதை! - மறைந்த திமுக தலைவர்

திருவண்ணாமலை: மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு திருவண்ணாமலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வேலு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

kalaignar anniversary
kalaignar anniversary

By

Published : Aug 7, 2020, 11:22 PM IST

திருவண்ணாமலை சாரோன் பகுதியில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ.வேலு, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கி, திருவண்ணாமலை நகராட்சியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் துய்மை பணியாளர்கள், தூய்மை பாதுகாவலர்கள் ஆகியோர் நூறு பேருக்கு மலர்மாலை அணிவித்து, கௌரவித்தார் மேலும் அவர்களுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அனைவருக்கும் வழங்கினார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில், தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துய்மை பணியாளர்கள், தூய்மை பாதுகாவலர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுக்கு மாலைமரியாதை செலுத்தப்பட்டது" எனக் கூறினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:’ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற சூளுரைக்கிறோம் தலைவரே’ - ஸ்டாலின் உரை

ABOUT THE AUTHOR

...view details