கரோனா வைரஸ் எதிரொலியால் திருவண்ணாமலையில் நூற்றாண்டு கால வரலாற்றில் முதன் முறையாக, உலகப் பிரசித்திபெற்ற கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதன்முறையாக இதுபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு தோஷம் என வதந்தி பரவியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் புது வாணியங்குள தெருவில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை கழுவி, வாசலில் கோலமிட்டு, வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வீதிகளில் கோலத்தின் மீது விளக்கேற்றி வழிபட்டனர்.