திருவண்ணாமலை: மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து தேசிய காவல் பயிற்சியகத்தில் அடிப்படை பயிற்சி முடித்து, மதுரை மாவட்டத்தில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உட்கோட்டத்தில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதல் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.