திருவண்ணாமலை:44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நகராட்சி ஈசான்ய மைதானத்தில் 44ஆவது சர்வதேச செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் இன்று (ஜூலை 19) மாபெரும் கோலம் வரையப்பட்டது. அக்கோலத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.