தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு ஒழிப்பில் மும்முரம் காட்டும் சுகாதாரத்துறை!

திருவண்ணாமலை: டெங்குக் கொசு ஒழிப்புப் பணியில் வீடுகள், பள்ளிகளில் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நிலவேம்புக் குடிநீரை வழங்கினர்.

dengue

By

Published : Oct 25, 2019, 8:32 AM IST

தமிழகத்தில் டெங்குவைக் கட்டுபடுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட களம்பூர், விளாங்குப்பம், அத்திமூர், திண்டிவனம் உள்ளிட்ட கிராமங்களில் டெங்குக் காய்ச்சல் ஒழிப்புப் பணிகள் நடைபெற்றன.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தர், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கைத் தமிழர் முகாமினை பார்வையிட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு புகைமருந்து அடிக்கப்பட்டு கொசுப்புழு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

அதைனைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போலி மருத்துவர்களிடம் செல்லவேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க ஆய்வு

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கும்படியும் ஊராட்சிச் செயலாளருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து பள்ளிகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று காய்ச்சல் உள்ளதா என்று ஆய்வுசெய்தனர். டெங்குவைக் கட்டுபடுத்தும் நோக்கத்தில் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: டெங்குவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்

ABOUT THE AUTHOR

...view details