திருவண்ணாமலைஅண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் நாளான இன்று (டிச.6) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து இன்று மாலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 ஆடி உயரம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கால்நடை சந்தை ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தொடங்கிய கால்நடை சந்தையில், வெளி மாநிலங்களில் இருந்து குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள கால்நடை சந்தை களைகட்டி வருகிறது மேலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மதுரை, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொடைமாடு, செகுல்பிள்ளை, வண்டி மாடு, உழவர் மாடு, கரவை மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாடுகளும் காட்டு குதிரை, மாறுவாடு, சம்மன குதிரை உள்ளிட்ட குதிரை வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
இதில் மாடுகள் ரூ.10,000 முதல் ரூ.2 லட்சம் வரையிலும், குதிரைகள் ரூ.10,000 முதல் ரூ.3 லட்சம் வரையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. அதேநேரம், இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் காரணமாக கால்நடை சந்தை இல்லாததால், இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கக்கூடும் என வியபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!