திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று ஏழாவது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் மளிகைக் கடை, காய்கறிக் கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் வணிகர்களின் முழு ஒத்துழைப்புடன் மூடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்களும், வியாபாரிகளும், தாங்களாகவே முன்வந்து நிறுவனங்களை மூடி முழு ஊரடங்கினைக் ஒருமனதாக கடைபிடித்துவருகின்றன.
பெட்ரோல் நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், ஆள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.