திருவண்ணாமலை மாவட்டம் தண்டம்பட்டு கிராமம் இருளர் இனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (16). இவர் பிறவி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக கோவிந்த ராஜ் குடும்பத்தினர் கடந்த திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேல் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையை பரிந்துரை செய்தார். சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்த எண்ணிய கோவிந்தராஜ் குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் முகாமிற்குச் சென்றனர்.