தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலையில் புதியதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக 6 ஆயிரத்து 931 பேரும், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தோர், இருமுறை பதிவு செய்தவர்கள் என 4 ஆயிரத்து 233 பெயர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 699 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 11 ஆயிரத்து 747 பேரும், திருநங்கைகள் 90 வாக்காளர்கள் பேரும் மொத்தமாக 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 48 பேர் அதிகமாக உள்ளனர்.