திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு இன்றுவரை மூடப்படாமல் இருக்கிறது.
குழந்தை சுஜித்தின் மரணத்திற்குப் பின் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் பகுதியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாகவே பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் மக்களும் சரி ஆட்சியாளர்களும் சரி அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.