அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு தீர்த்த குணங்களில், சில வாரங்களுக்கு முன்னர் மீன்கள் செத்து மிதந்தன. இதனை ஆய்வு செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குளத்து நீரை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
குளத்தில் பிராண வாயுவை அதிகரிக்கும் முயற்சியை தொடக்கி வைத்த ஆட்சியர்! - new-project
திருவண்ணாமலை: வெட்டிவேர், நுண்ணுயிர் உரம் கலவை ஆகியவற்றைக் கொண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள குளத்தைச் சுத்திகரிக்கும் முறையை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடக்கி வைத்தார்.
அதனடிப்படையில், தற்போது குளத்து நீரில் உள்ள பிராண வாயு(ஆக்சிஜன்) குறைந்து இருப்பதாக முடிவுகள் வந்ததனால் இந்த அளவை உயர்த்துவதற்கு நுண்ணுயிர் கலவை, தாவரங்களின் உதவியோடு குளத்தில் உள்ள பச்சை நிறத்தில் உள்ள நீரைச் சுத்திகரிப்பதற்கு பணிகளை நேற்று(புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். வெட்டிவேர், நுண்ணுயிர் உரம் கலந்த கலவையை நீரில் மிதக்கவிடுவதன் மூலம் நீரானது சுத்திகரிக்கப்பட்டு நீரில் உள்ள பிராணவாயு (ஆக்சிஜன்) அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீரில் உள்ள மீன்கள் பாதுகாக்கப்படும், நீரும் தூய்மையானதாகப் பச்சை நிறத்திலிருந்து தெளிவான நிறத்தில் தூய்மையானதாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.