தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி ஒத்திகை - ஆய்வுமேற்கொண்ட சந்தீப் நந்தூரி - covid vaccine dry run

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

thiruvannamalai collector press meet, கரோனா தடுப்பூசி ஒத்திகை , ஆய்வு மேற்கொண்ட சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை செய்திகள், thiruvannamalai news, covid vaccine dry run, covid vaccine trials
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

By

Published : Jan 8, 2021, 2:35 PM IST

திருவண்ணாமலை:கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றுவருகிறது. அதன்படி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். அப்போது கரோனா தடுப்பூசி போடுவதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் என்னென்ன என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்படவுள்ளது. அதையொட்டி முன்னெச்சரிக்கையாக தற்போது ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது.

அரசு கரோனா தடுப்பு மருந்து வழங்கிய பின்னர் இணையத்தில் பதிவுசெய்த மருத்துவப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

அதன்பின்னர் திருவண்ணாமலைப் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details