தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தெருக்கூத்து போன்ற கலைகளை இந்த தலைமுறை கண்டுகொள்ளவில்லை’ - ஆட்சியர் கந்தசாமி - மவுண்ட் உட் சினி கிளப் தொடக்கவிழா

திருவண்ணாமலை: தெருகக்கூத்து போன்ற கலையை இந்த தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திரைக்கலைஞர்களுக்கான சங்கத்தின் தொடக்க விழாவில் பேசியுள்ளார்.

mount wood cine club tiruvannamalai  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  மவுண்ட் உட் சினி கிளப் தொடக்கவிழா  தெருக்கூத்து
தெருக்கூத்து போன்ற கலையை இந்த தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்- ஆட்சியர் கந்தசாமி

By

Published : Dec 23, 2019, 12:12 PM IST

மவுண்ட் உட் சினி கிளப் என்ற திரைக்கலைஞர்களுக்கான சங்கத்தின் தொடக்க விழா திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குத்துவிளக்கேற்றி மவுண்ட் உட் சினி கிளப்பை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் மவுண்ட் உட் சிட்னி கிளப் குழுவினர் எடுத்த பிச்சைக்காரி, தெருக்கூத்து, ஓட்டு உள்ளிட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதன்பின்னர் பேசிய ஆட்சியர் கந்தசாமி, "தெருக்கூத்து குறும்படம் பார்த்தபோது, மனம் அதைவிட்டு வேறு எங்கும் செல்லவில்லை.

தெருக்கூத்து போன்ற கலையை இந்த தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் - ஆட்சியர் கந்தசாமி

அதுபோன்ற கலையை இன்றைய தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். முழு நீளப்படங்களைக் காட்டிலும் குறும்படங்களைப் பார்ப்பதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர். திருவண்ணாமலையில் கலையரங்கம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கும்" என்று தெரிவித்தார். நிகழ்வின் இறுதியாக மவுண்ட் உட் சினி கிளப் குழுவின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பேரணிக்கு அனுமதி மறுப்பு: தடையை மீறுமா திமுக?

ABOUT THE AUTHOR

...view details