திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியைச் சோந்தவர் சுரேஷ். இவரது மகள் கோபிகா தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.
கரோனா வைரஸ் பாதிப்பால் வறுமையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, இவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து திருவண்ணாமலையில் புதுவாணியங்குளம் 7ஆவது தெருவில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி சுகுனாவை சிறுமியின் வீட்டிற்கு அழைத்து வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சேமிப்புப் பணத்தை நேரடியாக சுகுனாவிற்கு வழங்க செய்தார்.
மேலும் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அரிசி, மளிகை பொருள்களையும் வழங்கினார். அதேபோல் சிறுமியின் இந்த மனிநேயத்தை பாராட்டிய அவர் சான்றிதழையும் வழங்கினார்.
இதையும் படிங்க: நெகிழச் செய்யும் மனிதநேயம்! - உதவிக்கரம் நீட்டும் சாமானியர்கள்!