தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவை கடைப்பிடிப்பதில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக தொடர்வதால் எந்தவிதமான தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அந்த 12 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று.
இந்த நிலையில் திருவண்ணாமலை நகரில் நகைக் கடை, துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட 90 விழுக்காடு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே சென்று வருகின்றனர். குறிப்பாக ரேஷன் கடைகளில் மக்கள் அதிகளவில் கூடி அத்தியாவசிய பொருள்களை வாங்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் உள்ளனர்.