தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையர் கோயிலில் சிறப்பு வழிபாடு...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை திருவிழாவின் முதல் நாளில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அண்ணாமலையர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள்
அண்ணாமலையர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள்

By

Published : Nov 28, 2022, 7:26 AM IST

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை விளங்குகிறது. திருவண்ணாமலை அண்னாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தீபத் திருவிழாவின் முதல் நாள் இரவில் விநாயகர், சந்திரசேகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள்

தொடர்ந்து பஞ்ச மூர்த்தி சுவாமிகள் வெள்ளி மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய சுவாமிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:உள்நோயாளிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details