திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருள் பாலிக்கும் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் தை மாதம் ஐந்தாம் நாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம், அதையொட்டி திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு மண்டகப்படி செய்து வழிபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கரோனோ கட்டுப்பாடு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இன்று நடைபெற இருந்த தீர்த்தவாரி விழாவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். இதனால் திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆறு தீர்த்தவாரிக்கு அண்ணாமலையார் புறப்பாடு இன்று நடைபெறவில்லை.