திருவண்ணாமலை:பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் கார்த்திகை தீபத் திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாம் நாளான நாளை டிச.6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக, தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு அண்ணாமலையார் கோயில் கிளி கோபுரம் அருகே சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது கொப்பரை எடுத்துச்செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது.